நாமக்கல்: திருச்செங்கோட்டில் உள்ள சுதந்திர போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினருமான, காளியண்ண கவுண்டரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார். அந்த மடலை, நாமக்கல் கலெக்டர் மெகராஜ், நேரில் சென்று காளியண்ண கவுண்டரிடம் வழங்கினார்.
முதல்வர் அனுப்பிய மடலில் கூறியிருப்பதாவது: கஸ்தூரிப்பட்டி ஜமீன் குடும்பத்தை சேர்ந்த தாங்கள், விடுதலை போராட்டங்களில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, அம்பேத்கர், காந்தியடிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் மற்றும் ராஜாஜி உள்ளிட்ட பெருந்தலைவர்களுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர். கொல்லிமலை பகுதிக்கு சாலை அமைத்ததோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பல பள்ளிகளை தோற்றுவிப்பதற்கும், போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்கும், விவசாய திட்டங்களை ஏற்படுத்தியதற்கும், மனதார பாராட்டுகிறேன். சீரிய கருத்துகள், ஜனநாயக தத்துவங்கள், மனிதநேய பண்புகளை, தமிழ் பற்றை மக்களிடத்திலே, குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே எடுத்துச் சென்று, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, அரசியல், பொது சேவையில் நன்முத்திரை பதித்துள்ளீர்கள். இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும், மக்கள் பணியாற்றிய தாங்கள், நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடூழி வாழ்ந்து, தொடர்ந்து மக்கள் பணியாற்ற, இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE