பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, நல்லூரில், மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, பக்த அனுமனுக்கு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்த அனுமன் சுவாமி, வெள்ளிக்கவசம், வடைமாலை மற்றும் வெற்றிலை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில், 'அஞ்சனை

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, நல்லூரில், மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, பக்த அனுமனுக்கு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்த அனுமன் சுவாமி, வெள்ளிக்கவசம், வடைமாலை மற்றும் வெற்றிலை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில், 'அஞ்சனை புதல்வன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. கோவில் முற்பகுதியில், திருக்கோடி விளக்குகள் ஏற்றப்பட்டன. அப்போது, பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என, முழக்கமிட்டவாறு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ப.வேலூர், குட்டுக்காடு பகுதியில் உள்ள, காவிரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காவிரியில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

* குமாரபாளையம், ஆஞ்சநேயர் சுவாமி கோவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில், லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், தட்டான் குட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.


* நாமகிரிப்பேட்டை அடுத்த, மெட்டாலாவில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. வெள்ளி கவசத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பலித்தார். அதேபோல், நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ராசிபுரம், அபயஹஸ்த ஆஞ்சநேயர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சூட்டி சிறப்பு அபி?ஷகம், ஆராதனை செய்தனர். அதேபோல், சேலம் ரோடு ரயில்வே பாலம், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் குன்றில் உள்ள ஆஞ்சயேர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்ததுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X