பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைகளுக்கு டோலியில் வரும் மலைவாழ் மக்கள்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ராசிபுரம்: சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு டோலியில் மலைவாழ் மக்கள் வருகின்றனர்.ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் போதமலை தொடங்குகிறது. இப்பகுதியில் மேலூர், கீழூர், கெடமலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. கெடமலையில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலூர், கீழுர் கிராமங்களுக்கு, வடுகம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். கெடமலைக்கு

ராசிபுரம்: சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு டோலியில் மலைவாழ் மக்கள் வருகின்றனர்.


ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் போதமலை தொடங்குகிறது. இப்பகுதியில் மேலூர், கீழூர், கெடமலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. கெடமலையில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலூர், கீழுர் கிராமங்களுக்கு, வடுகம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். கெடமலைக்கு புதுப்பட்டியில் இருந்து, 11 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதேசமயம் நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி அடுத்த சம்பூத்துமலையில் இருந்து, 1.5 கி.மீ., தூரத்தில்தான் கெடமலை உள்ளது. தற்போது, சம்பூத்து மலை வரை தார்ச்சாலை வசதியுள்ளது. அதற்கு மேல், வனப்பகுதியில் உள்ள சலையில் செல்ல வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். எனவே, கெடமலை மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அடிவாரத்திற்குதான் மருத்துவம் பார்க்க வர வேண்டியுள்ளது. சாலை வசதி, வாகன வசதி இல்லாததால், உடல்நிலை பாதிக்கப்பட்டோரை, டோலி கட்டி அதன் மூலம் மட்டுமே தூக்கி வரவேண்டும். கீழே வருவதற்குள், சில சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் இறந்த சம்பவமும் நடந்துள்ளது. இதேபோல்தான் கீழூர், மேலூருக்கும் மருத்துவ வசதி இல்லை. இது குறித்து, மலைவாழ் மக்கள் மாநில தலைவர் குப்புசாமி கூறியதாவது: கெடமலை பகுதியில், சாலை வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகிறோம். வயதானவர்கள் மருத்துவ வசதி இல்லாமல் இறக்க நேரிடுகிறது. சிகிச்சைக்கு கீழே வரவேண்டும் என்றால், டோலி கட்டிதான் தூக்கி வரவேண்டும். இங்குள்ள துவக்கப்பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தால், இப்பகுதி மக்களுக்கு மற்ற வசதிகள் எளிதில் கிடைத்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X