ராசிபுரம்: பட்டணம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை, பூட்டியவர்கள் மீது, செயல் அலுவலர் புகார் அளித்துள்ளார். ராசிபுரம் அடுத்த, பட்டணம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். டவுன் பஞ்சாயத்தில், பயன்படுத்தாமல் இருந்த, இரும்பு பைப்புகளை சில நாட்களுக்கு முன்பு, செயல் அலுவலர் சிவராஜ் டெண்டர் விட்டுள்ளார். அதை உள்ளூர் நபர் ஒருவர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டணத்தை சேர்ந்த சிலர், டவுன் பஞ்., அலுவலகம் வந்துள்ளனர். இரும்பு பைப் டெண்டரில், முறைகேடு செய்திருப்பதாக கூறி, டவுன் பஞ்சாயத்து கேட்டை மூடியுள்ளனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீசார், பொதுமக்களிடம் டெண்டர் விட்டதற்கான ஆவணங்களை, செயல் அலுவலர் சிவராஜ் காட்டியுள்ளார். இதற்கிடையில், டவுன் பஞ்சாயத்து கேட்டை மூடிய நபர்கள் மீது, போலீஸ் ஸ்டேஷனில் செயல் அலுவலர் சிவராஜ் புகாரளித்துள்ளார்.
இது குறித்து, செயல் அலுவலர் கூறியதாவது: பழைய இரும்பு பைப்புகள், குறைவான மதிப்பீடு என்பதால், நாளிதழில் விளம்பரம் செய்யவில்லை. நோட்டீஸ் போர்டில் மட்டும், வெளியிட்டு விட்டு ஏலம் நடத்தினோம். 6,000 ரூபாய்க்கு ஏலம் போனது. எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர், வேண்டும் என்றே பிரச்னையை கிளப்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE