பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 3,000 அடி உயரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றி பார்க்க வரும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆகாயகங்கை நீர் வீழ்ச்சி, மாசில்லா அருவி, சிற்றருவிகளில் குளிப்பதற்காக, விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 3,000 அடி உயரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றி பார்க்க வரும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆகாயகங்கை நீர் வீழ்ச்சி, மாசில்லா அருவி, சிற்றருவிகளில் குளிப்பதற்காக, விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த, 2020, மார்ச், 24 முதல், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எட்டு மாதத்துக்கு பின், சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கொல்லிமலை செல்ல, மூன்று நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவுதல் குறைந்து வருகிறது. இந்நிலையில், கொல்லிமலைக்கு விடுமுறை நாட்களில், அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வர். இதனால், தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. அவற்றை தடுக்க, கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, புளியஞ்சோலை மற்றும் சூழல் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வரும், 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களுக்கு, பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X