பொது செய்தி

தமிழ்நாடு

போனஸ் குறித்து பதில் தர இன்று காலை வரை அவகாசம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த, போனஸ் பேச்சுவார்த்தையில் பதில் தர, ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று காலை வரை அவகாசம் கேட்டனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், பொங்கல் போனஸ், 20 சதவீதம் கேட்டனர். ஜவுளி உற்பத்தியாளர்கள், அதற்கு உடன்பட மறுத்து வந்தனர். இரண்டு கட்ட பேச்சு நடந்து, 8 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறியும் தீர்வு காணாமல்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த, போனஸ் பேச்சுவார்த்தையில் பதில் தர, ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று காலை வரை அவகாசம் கேட்டனர்.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், பொங்கல் போனஸ், 20 சதவீதம் கேட்டனர். ஜவுளி உற்பத்தியாளர்கள், அதற்கு உடன்பட மறுத்து வந்தனர். இரண்டு கட்ட பேச்சு நடந்து, 8 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறியும் தீர்வு காணாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தங்கம், இன்ஸ்பெக்டர் தேவி முன்னிலையில், போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். இது குறித்து, தாசில்தார் தங்கம் கூறியதாவது: குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே நடந்த, போனஸ் பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கத்தினர் இறுதியாக, 8.5 சதவீதம் கேட்டனர். அதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள், நாங்கள் அனைத்து சங்கங்களை கேட்டுதான் பதில் சொல்ல முடியும். ஆகவே நாளை (இன்று) காலை வரை அவகாசம் வேண்டும் என கேட்டு கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன், செயலர் சுந்தரராஜ், பொருளாளர் ராஜேந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலர் அசோகன், சுப்பிரமணி, மோகன், பாலுசாமி, வெங்கடேசன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X