கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

Added : ஜன 13, 2021
Share
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, நன்செய் இடையாரில் உள்ள, மூங்கில் வளத்தான் கோவிலில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சங்கிலி கருப்பண்ணசாமி, முருகன், வள்ளி, தெய்வானை, பொன்னாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல் திருவேலீஸ்வரர்,

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, நன்செய் இடையாரில் உள்ள, மூங்கில் வளத்தான் கோவிலில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சங்கிலி கருப்பண்ணசாமி, முருகன், வள்ளி, தெய்வானை, பொன்னாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல் திருவேலீஸ்வரர், மகாமாரியம்மன், ராஜா சுவாமி, ப.வேலூர் மாரியம்மன், பகவதியம்மன், செல்லாண்டியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி, அனிச்சம்பாளையத்தில் உள்ள முருகன், பாண்டமங்கலம் மாரியம்மன், வெங்கட்ரமண சுவாமி கோவில், கபிலர்மலை பாலதண்டாயுதபாணி, பச்சைமலை முருகன் உட்பட பல்வேறு கோவில்களில், அமாவாசை முன்னிட்டு அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, வேத மந்திரம் முழங்க ஹோமம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X