பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், ஒட்டமெத்தை பகுதியில் நேற்று இரவு, 9:00 மணிக்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை, போலீசார் மீட்டனர். ஆனங்கூரை சேர்ந்த, ஐந்து வயது ஆண் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள மருத்துவமனையில் காண்பித்த போது, குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. உடனடியாக, காலதாமதமின்றி, ஈரோடு கொண்டு செல்லுங்கள் என, தெரிவித்துள்ளனர். குழந்தையை வாடகை காரில் அழைத்து வந்த போது, பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. அப்போது பணியில் இருந்த, மதுவிலக்கு பிரிவு வாகன ஓட்டுனர் ராம்குமார், குழந்தையை தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, சைரன் ஒலி எழுப்பியபடி சென்று, ஐந்து நிமிடத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது குழந்தை நலமாக உள்ளது. போலீஸ் ராம்குமார் செயலை சக போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE