பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூடுதலாக ரூ.1.63 கோடி வருவாய்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மோகனூர்: மோகனூர் சர்க்கரை ஆலை, மேலாண் இயக்குனர் விஜய்பாபு வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1964ல், துவங்கப்பட்டு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசு மூலம், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கான விருதை, 19 முறையும், சிறந்து தொழில் நுட்பத்துக்கான விருதை, 9 முறையும், கரும்பு அபிவிருத்திக்கான விருதை, ஐந்து முறையும்

மோகனூர்: மோகனூர் சர்க்கரை ஆலை, மேலாண் இயக்குனர் விஜய்பாபு வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1964ல், துவங்கப்பட்டு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசு மூலம், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கான விருதை, 19 முறையும், சிறந்து தொழில் நுட்பத்துக்கான விருதை, 9 முறையும், கரும்பு அபிவிருத்திக்கான விருதை, ஐந்து முறையும் பெற்றுள்ளது. நடப்பு (2020-21), கரும்பு அரவை பருவத்தில், ஒரு லட்சம் மெ.டன் அரவை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கூடுதலாக, 13 ஆயிரத்து, 841 டன் அரவை செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியை பொறுத்தவரை, கடந்தாண்டை காட்டிலும் நடப்பு ஆண்டு, 0.4 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது. அதன் மூலம், ஆலைக்கு, 1.63 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். நடப்பு ஆண்டு, கரும்பு அரவை பருவம், நவ., 21ல் துவங்கி, நேற்று முன்தினம் வரை இலக்கு எட்டப்பட்டது. சராசரி கரும்பு அரவை நாள் ஒன்றுக்கு, 2,189 மெட்ரிக் டன். கடந்த ஆண்டைவிட, 441 மெட்ரிக் டன் கூடுதலாக அரவை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X