கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அசில் நாட்டுக்கோழிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: சமுதாயத்தில், பெண்கள் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அசில் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், இலவச வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள், 3.17 கோடி ரூபாய் மதிப்பில், 2,476 பயனாளிகளுக்கும், இலவச பசு மாடுகள், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், 400 பயனாளிகளுக்கும், புறக்கடை கோழி வளர்க்கும் திட்டம் மூலம், 33 லட்சம் ரூபாய் மதிப்பில், 3,200 பயனாளிகளுக்கும் என மொத்தம், 5.10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள், 6,076 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் லதா, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர்கள் சரவணக்குமார், முரளிதரண், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE