பொது செய்தி

தமிழ்நாடு

ஆபாச வீடியோக்கள்: யுடியூப் சேனல்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.பெசன்ட் நகர் கடற்கரை சென்ற பெண்களிடம், ஆபாசமாக கேள்வி கேட்டு, பதில் கூற மறுத்த பெண்களை துரத்தி சென்று படம்பிடித்து ஒளிபரப்பிய, 'சென்னை டாக்' யு டியூப் சேனல் உரிமையாளர்
ஆபாச வீடியோக்கள், யுடியூப், யுடியூப் சேனல், சென்னை போலீஸ், கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

பெசன்ட் நகர் கடற்கரை சென்ற பெண்களிடம், ஆபாசமாக கேள்வி கேட்டு, பதில் கூற மறுத்த பெண்களை துரத்தி சென்று படம்பிடித்து ஒளிபரப்பிய, 'சென்னை டாக்' யு டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய்பாபு, கேமரா மேன் அசேன்பாஷா ஆகியோரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த கேமரா, மைக், மூன்று மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


latest tamil news


இந்நிலையில், யுடியூப் சேனல்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விடுத்த எச்சரிக்கை: வரும் நாட்களில், யுடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . ஆபாசமான வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். யுடியூப் சேனல்களையும், அவற்றின் வீடியோக்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Murugaiah - chennai,இந்தியா
14-ஜன-202113:01:13 IST Report Abuse
M.P.Murugaiah There are lots such videos which needs to be removed from you tube channel which are vulgar and obsence
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-ஜன-202112:20:59 IST Report Abuse
Rajas அந்த காலத்தில் போலீஸ் அடிக்கிற அடியில் தவறு செய்யவே பயப்படுவார்கள். ரோட்டில் அடித்து இழுத்து ஊர்வலமாக போவார்கள். அப்போது போலீஸ் அதிகாரிகளும் நேர்மையாக இருந்தார்கள். கட்சிக்காரர்கள் கூட போலீஸ் ஸ்டேஷன் போக பயப்படுவார்கள். அதிகாரிகள் நேர்மை தவறி நடந்தார்கள். மனித உரிமை கமிஷனும் வந்தது. அதன் பின் தப்பு செய்கிறவர்கள் மட்டுமே சந்தோசமாக இருக்கிறார்கள். மக்களும் லஞ்சம் வாங்குபவனை திறமைசாலி என்று கொண்டாடுகிறார்கள். நேர்மையானவன் இப்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
14-ஜன-202108:54:56 IST Report Abuse
Svs yaadum oore //....ரௌடி பேபி சூரியா பேசும் ஆபாசப் பேச்சுக்கள் ....//....இவன் யார் இவன் பேபி சூரியா ??....இவனை போன்ற இந்த யுடியூப் சேனல் பல கோடி பார்வைகளாம் ...இது தான் தமிழர் திராவிடர் பண்பாடு ....இதில் கல்லா கட்டறவன் நிதி கம்பெனி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X