இன்றைய கிரைம் ரவுண்ட்அப் | Dinamalar

இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: டில்லி, மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உலர் பழ விற்பனையில் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் மோகித் கோயல் கைது.* பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான மேனேஜர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை .* பீஹாரின் முசாபர்பூரில் 15 வயது மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் மீது
கிரைம் ரிப்போர்ட், கைது, மிரட்டல், அமலாக்கத்துறை, எம்பி.,

புதுடில்லி: டில்லி, மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உலர் பழ விற்பனையில் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் மோகித் கோயல் கைது.

* பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான மேனேஜர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை .

* பீஹாரின் முசாபர்பூரில் 15 வயது மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* மேற்கு வங்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* பண மோசடி வழக்கில் திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., கே.டி.சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


latest tamil news

தமிழகத்தின் நிகழ்வு !


* சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள காசி தியேட்டர் மீது எம்ஜிஆர் நகர் போலீசார் கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* பொய் புகார் மற்றும் மிரட்டல் மூலம் பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரில் 10 ஆண்டுகளாக படிக்காமல் மருத்துவம் பார்த்த ரமேஷ் என்பவர் கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

*சென்னை திருவல்லிக்கேணியில்,ஓசி சாப்பாடுக்கு ஓனரை மிரட்டிய பாஜ பிரமுகர் இருவர் கைது செய்யப்பட்டனர். மத கலவரம் தூண்டும் வகையில் பேசியதால் போலீசார் நடவடிக்கை


உலக நடப்பு !* கனடாவில் கொரோனா ஊரடங்கை மீறி இரவு 9 மணிக்கு நடைபயிற்சி சென்ற தம்பதியினருக்கு தலா 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

*துருக்கி நாட்டை சேர்ந்த மத வழிப்பாட்டுத் தலைவருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X