சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்எதிர்ப்பு சக்தி எத்தனை நாள்கொரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 95 சதவீதம் செயல்படுகிறது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட சில நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ஓராண்டு வரை செயல்படுகிறது என அந்நிறுவனம்

அறிவியல் ஆயிரம்
எதிர்ப்பு சக்தி எத்தனை நாள்
கொரோனாவுக்கு எதிரான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 95 சதவீதம் செயல்படுகிறது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட சில நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு, கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ஓராண்டு வரை செயல்படுகிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2021க்குள் 60 முதல் 100 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்து வெளியிடும் என தெரிவித்துள்ளது. மாடர்னா தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ., வகையை சேர்ந்தது.

தகவல் சுரங்கம்
நெல் ஆராய்ச்சி

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிப்பைன்சின் லாஸ் பாரியஸ் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 620 ஏக்கர். இது ஒரு விவசாய ஆராய்ச்சி நிறுவனம். இந்தியா, சீனா, வங்கதேசம், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா உட்பட 17 நாடுகளில் இதன் அலுவலகங்கள் உள்ளன. 1960களில் ஆசியாவில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து, பசுமை புரட்சியை ஏற்படுத்தி, உற்பத்தியை பெருக்கும் விதமாக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. பல வகையான நெல்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. சர்வதேச அளவில் செயல்படும் 15 விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X