ஆர்வக்கோளாறு வேண்டாமே!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஆர்வக்கோளாறு வேண்டாமே!

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (3)
Share
ஆர்வக்கோளாறு வேண்டாமே!ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன் உடல் நிலையை காரணம் காட்டி, 'அரசியலுக்கு வரப் போவதில்லை' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார். அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும், ஆர்வக் கோளாறாலும், அவரின் ரசிகர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.ரஜினி ரசிகர்களின் இந்த செயலானது, ஏற்புடையதாக இல்லை.


ஆர்வக்கோளாறு வேண்டாமே!ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன் உடல் நிலையை காரணம் காட்டி, 'அரசியலுக்கு வரப் போவதில்லை' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார். அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமலும், ஆர்வக் கோளாறாலும், அவரின் ரசிகர்கள், சென்னையில் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.ரஜினி ரசிகர்களின் இந்த செயலானது, ஏற்புடையதாக இல்லை. 'சிஸ்டம் சரியில்லை' என, ரஜினி சொன்னதும்; அரசியல் கட்சி துவக்க, தன் ரசிகர்களை தயார்படுத்தி வைத்திருந்ததும் உண்மை.டிச., 31ம் தேதியன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்றவர், அதற்காக, கட்சியின் பெயரை பதிவு செய்ய, டில்லியில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு, தன் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்.கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரையும் நியமித்தார். இதில் எதிலும், எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை.கட்சி துவக்கி, நாட்டின் சிஸ்டத்தை சீர் செய்வதற்கு, ரஜினியின் உடல் நிலை ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டதால், அவரால், அரசியலில் இறங்க முடியவில்லை.அதனால், தன் ரசிகர்களை, அவரவர் பணிகளை மேற்கொண்டு, குடும்பத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். இதில் என்ன தவறு?'ரஜினியின் ரசிகர்கள்' என்று பெருமையுடன் கூறிக் கொள்வது உண்மையானால், அவரின் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக, அவருக்கு அறிவுரையும், ஆலோசனையும் கூறி, அரசியல் கட்சி துவங்கியே ஆக வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது. உங்கள் மிரட்டலுக்கு பணிந்து, கட்சியை துவக்கி, பிரசாரம் செய்யப் போகும் வழியில், ஏதாவது எக்குத் தப்பாக நடந்து விட்டால், அதற்கு யார் பொறுப்பு?
கட்சி துவங்குவதைக் காட்டிலும், ரஜினி உயிருடன் இருப்பது முக்கியமல்லவா? ரஜினி ரசிகர்களே, உங்கள் ஆர்வக் கோளாறால், அவரின் உயிருக்கே உலை வைத்து விடாதீர்கள். ப்ளீஸ்!


இ.பி.எஸ்.,சின் ராஜதந்திரம் எடுபடுமா?டாக்டர் ராம் மோகன்தாஸ், காட்டாங்குளத்துார், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'அக்கா இல்லை; அரண்மனை இல்லை; இவற்றுக்கு எல்லாம் மேலாக அதிகாரம் இல்லை' என்ற நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சிறையில் இருந்து வெளிவந்த பின் என்ன செய்வார்?கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது. ஆனால் அது மட்டும் போதுமா?முதல்வர் இ.பி.எஸ்., பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, இந்த ஆட்சியை தக்க வைத்துள்ளார். அவரின் சாமர்த்தியம் மிகப் பெரியது. மத்திய அரசு, தமிழக எதிர்க்கட்சி, உட்கட்சி கோஷ்டி பூசல் ஆகியவற்றை சமாளித்தவருக்கு, சசிகலா ஒரு பொருட்டாக இருக்க மாட்டார்.'முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., தான்' என அறிவித்து, ஓ.பி.எஸ்., தன் கட்சிப் பதவியை காப்பாற்றிக்கொண்டார்.சசிகலா வெளியே வந்ததும், அவரின் விசுவாசிகள் யார் என்பது தெரிய வரும். தேர்தல் நேரத்தில், அவரின் ஆதரவாளர்களின் நடவடிக்கை, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.சசிகலாவை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொள்வது, தேர்தல் நேரத்தில் சரியான முடிவு. அவருக்கு கட்சியில் ஒரு கவுரவ பதவிக் கொடுத்து, ஓரமாக அமர செய்யலாம். ஆனால் அவரது குடும்பம் புகுந்தால், கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.சசிகலாவிற்கு மக்கள் செல்வாக்கு ஏதும் இல்லை; கட்சியில் சில ஆதரவாளர்கள் மட்டும் தான் இருப்பர். அவர்களை மட்டும், 'கவனித்தால்' சசிகலா ஒரு பிரச்னையே இல்லை. அவர், அ.தி.மு.க.,விற்கு தேவைப்பட மாட்டார்.எது எப்படி இருந்தாலும், சசிகலா வருகைக்கு பின், ராஜ தந்திர நடவடிக்கைக்கு, இ.பி.எஸ்., தயாராக வேண்டும்.


'அறிவுஜீவி'களே எங்கே போனீர்!சிவகுமார், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்: மதசார்பின்மை பேசும் போலி பகுத்தறிவாளர்களே... எங்கே தொலைந்து போனீர்?ஆந்திராவில், கடந்த ஓராண்டில் மட்டும், 120 ஹிந்து கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன. ஒரு கண்டனமில்லை; போராட்டமில்லை. மனித சங்கிலி இல்லை. ஏன் இதுபற்றி இந்நாள் வரை, ஒரு சிறிய அறிக்கைக் கூட, எந்த கட்சித் தலைவரிடம் இருந்தும் வெளிவரவில்லை.நாட்டின் ஏதாவது ஒரு முலையில், சாலையோரத்தை அபகரித்து கட்டப்பட்டிருக்கும், பிற மத வழிபாட்டு தலங்களின் கண்ணாடி உடைந்தால் கூட, 'மோடி ஆட்சியின் அராஜகம் பாரீர்' என, காட்டுக் கத்து கத்துவர்.அனைத்து ஊடகங்களிலும் சூடு பறக்கும் விவாதங்கள் நடக்கும். 'இதற்காக, மோடி அரசு உடனே பதவி விலக வேண்டும்' என, நம் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவர்; போராட்டம் செய்வர்.மோடி பிரதமரானதில் இருந்து, 'மத்திய அரசு, சிறுபான்மையினருக்கு எதிரானது' என, அனைத்து வழியிலும் திட்டமிட்டு, பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.சில, 'அறிவுஜீவி'கள், நம் மத்திய அரசு வழங்கிய
விருதை எல்லாம், திருப்பிக் கொடுத்து, தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டனர்.அவர்களை எல்லாம் எங்கே காணோம். ஆந்திராவில், 120 கோவில்கள் ஒரே ஒரு ஆண்டில் சூறையாடப்பட்டிருக்கிறது. மயான மவுனம் நிலவுகிறது.எங்கே போயினர், நாட்டின் சகிப்புத்தன்மை மீது அக்கறையுடைய சமூக காவலர்கள்?உள்நாட்டில் இருக்கும் ஹிந்து கோவில்களில், பக்தர்களிடம், 'தரிசன கட்டணம்' என்ற பெயரில், மாநில அரசு கொள்ளை அடிக்கின்றன. ஹிந்து கோவில்களின் வருமானத்தில் இருந்து கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் வெளிநாட்டிற்கு புனித பயணம் செல்ல, பணம் அள்ளிக் கொடுக்கப்படுகிறது.இந்நாட்டில் ஹிந்து என்றால், இளிச்சவாய் மக்களா? இது தான், நம் நாட்டு அரசின் மதசார்பற்ற செயலா? பெரும்பான்மையினரை காக்க, ஒருவரும் இல்லையா? உலகிலேயே அரசாலும், சிறுபான்மையினராலும், பெரும்பான்மையினர் ஒடுக்கப்படும் கொடுமை நிகழ்வது, நம் நாட்டில் மட்டுமே நடக்கிறது.ஹிந்து மதத்தினரை மட்டும் சுரண்டுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் பெயர், 'மதசார்பற்ற நாடு' என்பது அல்ல!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X