ஜன., 14, 1951
தேனி மாவட்டம், பெரியகுளத்தில், 1951 ஜன., 14ம் தேதி பிறந்தவர், ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு, அவரது தந்தை சூட்டிய பெயர், பேச்சிமுத்து. பி.ஏ., படித்துள்ள இவர், பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். அ.தி.மு.க.,வில் சேர்ந்து, பெரியகுளம் நகராட்சி தலைவரானார். 2001 தேர்தலில், எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதா, முதல்வர் பதவி இழந்த போது, அப்பதவியில் அமர வைக்கப்பட்டார். ஜெ., விடுதலை ஆன பின், 2002ல் முதல்வர் பதவியில் இருந்து விலகி, பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். 2014ல், முதல்வர் பதவியில் மீண்டும் அமர்ந்தார். ஜெ., மரணத்திற்கு பின், சசிகலா குடும்பத்திற்கு எதிராக போராடினார். தற்போது, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பதவியும் வகிக்கிறார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE