புதுடில்லி:கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கருத்தில் கொண்டு, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த, 'போலியோ' சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும், வரும், 17ம் தேதி, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அடையாளம்
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்ததாவது:தேசிய நோய் தடுப்பு தினமான, ஜனவரி, 17ம் தேதி, சொட்டு மருந்து வழங்கும் முகாம், துவங்கப்படும். இரண்டு அல்லது, மூன்று நாட்களுக்கு, நாடு முழுதும், இந்த முகாம் நடக்கும். தடுப்பு மருந்துகள் பெறாத குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறி இருந்தார்.
இதற்கிடையே, 'கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், நாளை மறுநாள் முதல் துவங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடிதம்
இது தொடர்பாக, கடந்த, 9ம் தேதி, அனைத்து மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலர் களுக்கும், மத்திய சுகாதாரத் துறை, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அதில், 'எதிர்பாராத நடவடிக்கைகள் காரணமாக, வரும், 17ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE