பொது செய்தி

இந்தியா

இந்தியாவுக்கு வருகிறது 'டெஸ்லா' மின்சார கார்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:அமெரிக்காவின் 'டெஸ்லா' மின்சார கார், இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. உலகின் இரண்டாவது பணக்காரர், எலன் மஸ்கின், டெஸ்லா கார்ப்., நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது.இந்நிறுவனம் தற்போது, இந்தியாவில் கால் பதித்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில், 'டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி' என்ற பெயரில், நிறுவனம் பதிவு
 இந்தியாவுக்கு வருகிறது 'டெஸ்லா' மின்சார கார்

பெங்களூரு:அமெரிக்காவின் 'டெஸ்லா' மின்சார கார், இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. உலகின் இரண்டாவது பணக்காரர், எலன் மஸ்கின், டெஸ்லா கார்ப்., நிறுவனம், மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் தற்போது, இந்தியாவில் கால் பதித்துள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில், 'டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி' என்ற பெயரில், நிறுவனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை அமைக்க உள்ள டெஸ்லா, துவக்கத்தில், மின்சார கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது.பின், உள்நாட்டு வாகன நிறுவனத்துடன் இணைந்து, இந்திய சாலைகளுக்கு ஏற்ற, மின்சார கார்களை தயாரிக்க, அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

டெஸ்லா, இந்தியாவில் முதன் முதலாக, 'மாடல் 3' மின்சார கார்களை விற்பனை செய்ய உள்ளது. அமெரிக்காவில், டெஸ்லா காரின் விலை, 32 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. இது, இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனைக்கு வரும்போது, 60 லட்சம் ரூபாயாக இருக்கும் என, தெரிகிறது. இந்தியாவில், இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதனால், டெஸ்லா கார் விலை அதிகமாக இருக்கும்.

எனவே, மின்சார வாகன தயாரிப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசிடம், டெஸ்லா நிறுவனம், இறக்குமதி வரிச் சலுகை கோரும் என, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X