புதுடில்லி:'திருமணத்தை மீறிய கள்ள உறவு குற்றமாகாது என்ற தீர்ப்பில் இருந்து ராணுவம் உள்ளிட்ட படைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
திருமணத்தை மீறிய கள்ள உறவு தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 2018, செப்.,ல் தீர்ப்பு அளித்தது. 'இது தொடர்பான சட்டம், பாலின பேதத்தை உருவாக்குகிறது. அதனால், இந்த சட்டம் செல்லாது. கள்ள உறவு குற்றமாகாது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் விளக்கம் கேட்டு, ராணுவ அமைச்சகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ராணுவம் உள்ளிட்ட படை வீரர்கள், பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளில் பணியாற்றுகின்றனர். தங்கள் குடும்பத்தை நீண்ட காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த தீர்ப்பால், தங்களுடைய வீடுகளில் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பணியாற்றும் சூழ்நிலை உள்ளது.
ஏற்கனவே, ராணுவம், உள்ளிட்ட படைகளின் சட்டங்களின்படி, ஆண், பெண் பேதம் கிடையாது. அனைவருக்கும் பொதுவான விதிகள், சட்டங்களே உள்ளன. உரிமைகள் தொடர்பான சட்டங்களில் இருந்து, படைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, அரசியல் சாசனம் கூறுகிறது.அதனால், கள்ள உறவு தீர்ப்பு, படையினருக்கு பொருந்துமா; அவ்வாறு பொருந்தும் என்றால் விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE