பொது செய்தி

இந்தியா

நவீன தேஜஸ் போர் விமானம் வாங்க அமைச்சரவை குழு ஒப்புதல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 83 அதிநவீன இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க, ராணுவ அமைச்சரவை குழு, று ஒப்புதல் அளித்தது.நம் விமானப் படையில் இருக்கும் பழைய போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிய ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு
 நவீன தேஜஸ் போர் விமானம் வாங்க அமைச்சரவை குழு ஒப்புதல்

புதுடில்லி:'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 83 அதிநவீன இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க, ராணுவ அமைச்சரவை குழு, று ஒப்புதல் அளித்தது.

நம் விமானப் படையில் இருக்கும் பழைய போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிய ரக போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதையடுத்து, கடந்த, 2018ல், 1,500 கோடி ரூபாய் செலவில், 114 புதிய ரக போர் விமானங்களை வாங்க, வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டன.

அமெரிக்காவை சேர்ந்த, 'போயிங், லாக்ஹீட் மார்ட்டின்' மற்றும் ஐரோப்பிய நாடான, சுவீடனை சேர்ந்த, 'சாப் ஏபி' ஆகிய நிறுவனங்கள், ஒப்பந்த புள்ளியில் பங்கேற்றன.இதற்கிடையே, விலை உயர்ந்த ராணுவ விமானங்கள் மற்றும் உபரணங்களை, வெளிநாடுகளில் இருந்து வாங்குவதை தவிர்க்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதையடுத்து, உள்நாட்டை சேர்ந்த, 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, 123 போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே, 40 போர் விமானங்களை வாங்க, இந்நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில், கூடுதலாக, 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 83 அதிநவீன இலக ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க, ராணுவ கவுன்சில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற, ராணுவ அமைச்சரவை குழு கூட்டத்தில், 83 அதிநவீன தேஜஸ் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அடுத்த மாதம் நடைபெறும், இந்திய விமானப் படை கண்காட்சியின் போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் கூறியதாவது:அதிநவீன இலகு ரக தேஜஸ் போர் விமானங்கள், நம் விமானப் படையின் திறனை பன்மடங்கு அதிகரிக்கும். ராணுவ தளவாட தயாரிப்பில் நம் சுயசார்பு கொள்கையினை, இது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X