பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடம் பிப்., 1ல் திறப்பு?

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை :ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை, பிப்ரவரி, 1ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டு உள்ளார்.மறைந்த ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கு, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு, ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி மற்றும்
 ஜெயலலிதா, நினைவிடம், திறப்பு

சென்னை :ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை, பிப்ரவரி, 1ம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடத்த, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டு உள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கு, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம் என, அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு, ஜெயலலிதா நினைவிடம் கட்டும் பணி மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடம் புனரமைப்பு பணி, 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இறுதி கட்ட பணியை, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் மூத்த அமைச்சர்கள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். நினைவிடம் திறப்பு விழாவுக்கு, பிரதமர் மோடியை அழைக்க, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். இதற்காக, வரும், 18ம் தேதி டில்லி சென்று, பிரதமரை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.

திறப்பு விழா நடத்த, 27ம் தேதி மட்டுமின்றி, பிப்., 1ம் தேதி, 2ம் தேதி, 9ம் தேதி ஆகிய, நான்கு நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஒப்புதலை பெற்று, திறப்பு விழா தேதி உறுதி செய்யப்பட உள்ளதாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-ஜன-202120:31:18 IST Report Abuse
Vijay D Ratnam தங்களது ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்த போதே மறைந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மூவருக்கும் சென்னை மெரினாவில் நினைவிடம் இருப்பது சிறப்பு.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
14-ஜன-202117:58:59 IST Report Abuse
Murthy நம்பர் ஒன் குற்றவாளிக்கு நினைவிடம் கட்டும் அரசு ......இதை விட ஒரு கேவலம் உண்டா?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜன-202120:49:41 IST Report Abuse
Visu Iyerஅதானே.. இதை சட்டம் பார்த்துக் கொண்டா இருக்கும் என நினைக்கிறீர்கள்.....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜன-202114:58:03 IST Report Abuse
Visu Iyer நீதி மன்ற குற்றவாளிக்கு மணி மண்டபம் கட்ட சட்டம் அனுமதிக்கிறத...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜன-202116:56:19 IST Report Abuse
கொக்கி குமாரு சரி விடுங்க, அவர் மீது இருந்தாவது வெறும் 100 கோடிகள் சொத்து சேர்த்த வழக்கு. ஆனால், அந்த வழக்கை போட்ட திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி ரத்த சொந்தங்களின் சொத்து மதிப்பு ஐம்பதாயிரம் கோடிகளை நெருங்குகிறது. அங்குதான் நிற்கிறார் திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி....
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
14-ஜன-202117:49:16 IST Report Abuse
Ellammanஜெயாவின் சொத்து வெறும் நூறு கொடிகளா?? ஜெயாவின் கடைசி அல்லக்கை ராஜேந்திர பாலாஜி வீட்டிலேயே இரண்டாயிரம் கோடிக்கு மேலே உள்ளது.. சம்பத்தில் மரணமடைந்த ஊர் பேர் தெரியாத அமைச்சர் வீட்டில் எத்தனை ஆயிரம் கொடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.. அதை வசூல் செய்ய சிறப்பு கவனிப்புகள் எல்லாம் நடந்ததே??...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜன-202119:04:46 IST Report Abuse
கொக்கி குமாரு அது இருக்கட்டும், திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதியின் சொத்துக்களை விட அம்மாவின் சொத்துக்கள் குறைவா அதிகமா? கட்டுமரத்தின் சொத்துக்கள் அதிகம் என்றால் அது எப்படி வந்தது? உழைத்து சம்பாதித்தார்கள் என்று காதில் பூ சுற்ற வேண்டாம்....
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜன-202120:48:25 IST Report Abuse
Visu Iyerதொகை எத்தனை என்பதல்ல.. அது எத்தனை கோடி யாக இருந்துட்டு போகட்டும்.. குற்றவாளி தானே.. அவருக்கு மணிமண்டபம் அரசு செலவில்.. அதுவும் பிரதமர் அழைப்பில்.. என்றால்.. நீதிக்கு தலை வணங்க வேண்டாமா... இது தவறான முன் உதாரணமாக போயிடும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X