அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி: ஸ்டாலின் வாக்குறுதி

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (72+ 88)
Share
Advertisement
சென்னை ''ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்'' என தமிழர் பண்பாட்டு திருவிழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:தேர்தலில் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைய முடியவில்லை. தற்போது அது நுழைந்துள்ளது. ஆட்சி மாற்றம் வந்தவுடன்
DMK, MK Stalin, Stalin, விவசாய கடன், தள்ளுபடி, ஸ்டாலின், வாக்குறுதி

சென்னை ''ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்'' என தமிழர் பண்பாட்டு திருவிழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது:தேர்தலில் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைய முடியவில்லை. தற்போது அது நுழைந்துள்ளது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். லோக்சபா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

வேளாண் சட்டங்களால் எந்த தீமையும் இல்லை எனக்கூறி விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார் முதல்வர். தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆண்டு வழி பிறந்தே தீரும்.இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (72+ 88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஜன-202115:55:30 IST Report Abuse
g.s,rajan அத்தைக்கு மீசை முளைச்சாப்புலதான் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
15-ஜன-202104:22:04 IST Report Abuse
Vaduvooraan பொண்ணுக்கு கல்யாணம்..பையனோட மேற்படிப்பு...வீடு ரிப்பேர்... அப்படி இப்படின்னு பல இடங்களில் கடன் வாங்கியிருக்கிறேன். அதையும் தீம்காவே திருப்பிக் கொடுத்தாங்கன்னா நல்லாருக்கும். தேர்தல் அன்னைக்கு உதயசூரியன் சின்னத்துக்கு எதிராக இருக்கிற பட்டன ஒரு தடவ இல்ல பல முறை அழுத்துவேன்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
14-ஜன-202122:01:27 IST Report Abuse
 N.Purushothaman ஷூவை கூட கழட்டாம பொங்கல் வைப்பாரூ இந்த நவீன டுமிழன் ...அதை கூட ஆஹா ஓஹோன்னு அறிவாலய அனுதாபிகள் அப்பட்டமா ஜிங் சா அடிப்பாங்க ...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
17-ஜன-202123:42:29 IST Report Abuse
madhavan rajanஒன்பது கிரகம் உச்சத்தில் உள்ள ஒருவன் அடுப்பு ஏற்றாமலும் பொங்கல் வைக்கலாம். இவரு, இவர் நயினா, இவர் உத்தம புத்திரன் எல்லாம் வாயால வட சுடுறவங்களாச்சே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X