பொது செய்தி

இந்தியா

மொபைல்ஆப் மூலம் கடன்: குழு அமைத்தது ஆர்.பி.ஐ.,

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை :'மொபைல்ஆப்' மூலம் கடன் வழங்குவதில் மோசடி நடந்துள்ள நிலையில், ஆன்லைன் மற்றும் மொபைல்ஆப்மூலம் கடன் வழங்குவதை முறைபடுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க, ரிசர்வ் வங்கி பணிக் குழுவை அமைத்துள்ளது.சீனாவைச் சேர்ந்த சிலர், மொபைல்ஆப் மூலம் கடன் வழங்கி, அதிக வட்டி வசூலிப்பதுடன், கடன் வாங்கியோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் பிரச்னை சமீபத்தில் எழுந்தது. இது
மொபைல்ஆப், கடன், குழு, ஆர்.பி.ஐ.,

மும்பை :'மொபைல்ஆப்' மூலம் கடன் வழங்குவதில் மோசடி நடந்துள்ள நிலையில், ஆன்லைன் மற்றும் மொபைல்ஆப்மூலம் கடன் வழங்குவதை முறைபடுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க, ரிசர்வ் வங்கி பணிக் குழுவை அமைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிலர், மொபைல்ஆப் மூலம் கடன் வழங்கி, அதிக வட்டி வசூலிப்பதுடன், கடன் வாங்கியோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் பிரச்னை சமீபத்தில் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
'ஆன்லைன்' மூலமாகவும், மொபைல்ஆப் மூலமாகவும் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் ஜெயந்த் குமார் தாஷ் தலைமையில், ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதை முறைப்படுத்தவும், அதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும். மேலும், கடன் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது போன்றவற்றுக்கு தேவையான வழிமுறைகளையும் உருவாக்க, இந்தக் குழு ஆலோசனை வழங்கும்.இதன் மூலம், மோசடிகள் நடப்பதை தடுப்பதுடன், டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதை முறைப்படுத்த முடியும். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தன் அறிக்கையை அளிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
14-ஜன-202105:33:14 IST Report Abuse
N Annamalai ஒன்லைன் இல் மக்கள் ஏமாறிக்கொண்டே இருக்கிறார்கள் .அதை தடுக்க ஏதும் செய்ய கூடாதா ?.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
14-ஜன-202102:50:10 IST Report Abuse
கும்புடுறேன் சாமி 'மொபைல்ஆப்' மூலம் கடன் வழங்குவதில் மோசடி நடக்க காரணமே ஆர் ராசா தான் அவர்தான் ஏழைகளும் பயன்படுத்தும் விதமா குறைந்த மொபைல் கட்டணத்தை நிர்ணியத்தவர் அதனால் தான் மேல்நாட்டுக்கு இணையாக இந்தியர்களும் மொபைல் போன் பயன்படுத்துறாங்க அத காரணமா வெச்சு மோசடிகளும் அரங்கேறுகின்றன
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜன-202111:04:03 IST Report Abuse
கொக்கி குமாரு ஆண்டிமுத்து ராசா ஏழைகளுக்கு 2000 கோடிகளில் சலுகை விலையில் குறைந்த மொபைல் கட்டணத்தை கொடுத்துவிட்டு அந்தப்பக்கம் கனியக்காவுடன் சேர்ந்து கலைஞர் டிவி மூலமா ஊழல் செய்து நாட்டிற்கு ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடிகள் நஷ்டம் வருமாறு செய்தாரே அதெல்லாம் கும்புடுறேன் சாமி மாதிரி ஆட்களுக்கு தெரியாது. திருட்டு திமுகவின் சாதனையை பாருங்கள். தங்கள் தொண்டனை வெறும் 2000 கோடிகள் பெறுமான சலுகைகளை பேசவைத்துவிட்டு இரண்டு லட்சம் கோடிகள் நஷ்டத்தை பேச விடாமல், கேள்விகேட்காமல் செய்தார்கள். அங்குதான் நிற்கிறார் திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X