அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி ஸ்டாலின் வாக்குறுதி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை:''ஆட்சி பொறுப்பேற்றதும், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்,'' என, தமிழர் பண்பாட்டு திருவிழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொன்னேரி அடுத்த, நத்தம் கிராமத்தில், தமிழர் பண்பாட்டு திருவிழா நடந்தது. இதில், ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் விவசாய சங்க தலைவர்கள்
விவசாய கடன் தள்ளுபடி ஸ்டாலின் வாக்குறுதி

சென்னை:''ஆட்சி பொறுப்பேற்றதும், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்,'' என, தமிழர் பண்பாட்டு திருவிழாவில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொன்னேரி அடுத்த, நத்தம் கிராமத்தில், தமிழர் பண்பாட்டு திருவிழா நடந்தது. இதில், ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.


எதிர்பார்ப்பு

விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:இன்னும் நான்கு மாதம் தான்; தேர்தல் வரப்போகிறது. ஒரு மாற்றத்தை எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தவரை, தமிழகத்தில், 'நீட்' தேர்வு நுழைய முடியவில்லை. தற்போது, அது நுழைந்து உள்ளது.ஆட்சி மாற்றம் வந்தவுடன், 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், விவசாயத்திற்கான மின் கட்டணத்தை, ஒரு காசு குறைக்க வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது, 'மின்சார கட்டணம், ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்; முற்றிலும் இலவசம்' என, அறிவித்தார் கருணாநிதி.

கடந்த, 2006 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை, ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் கையெழுத்திட்டு, கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்த, 7,000 கோடி ரூபாய் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


துரோகம்

அதேபோன்று, நான்கு மாதத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். லோக்சபா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான, நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

'வேளாண் சட்டங்களால், எந்த தீமையும் இல்லை; நானும், விவசாயி தான்' எனக்கூறி, பச்சை துண்டு போட்டு, விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார், முதல்வர். தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆண்டு வழி பிறந்தே தீரும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X