அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி குறித்த வதந்திகள் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Updated : ஜன 15, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (6+ 37)
Share
Advertisement
திருச்சி:''கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட, 5 லட்சத்து 36 ஆயிரத்து, 500 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள், சென்னை வந்தன. அங்கிருந்து, மற்ற சுகாதார மண்டலங்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், அனுப்பி
 தடுப்பூசி, வதந்திகள்,  சுகாதார அமைச்சர், எச்சரிக்கை

திருச்சி:''கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட, 5 லட்சத்து 36 ஆயிரத்து, 500 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள், சென்னை வந்தன. அங்கிருந்து, மற்ற சுகாதார மண்டலங்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பெரம்பலுார், அரியலுார், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய சுகாதார மாவட்டங்களுக்கு, 68 ஆயிரத்து, 800 தடுப்பூசி மருந்துகள் திருச்சி வந்துள்ளன.

நேற்று, திருச்சியில் இருந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசி மருந்துகளை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், முதல் கட்டமாக, 307 இடங்களில், 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு, 100 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவுடன் நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடும் என்று எண்ணிவிடக் கூடாது.

தடுப்பூசி முதல் டோஸ் போட்ட, 28வது நாளில், 2வது டோஸ் போட வேண்டும். தொடர்ந்து, 2 டோஸ் தடுப்பூசி போட்டு, 42 நாட்களுக்கு பிறகே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவசியம் ஏற்பட்டால், நம்பிக்கையூட்டுவதற்கு, அதற்கான அனுமதி பெற்று, நானே போட்டுக் கொள்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


சரக்கு அடிக்காதீங்க


அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பொதுவாக எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் மது அருந்தக்கூாடது.இது தடுப்பூசி, ஆகையால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், அடுத்து வரும் 42 நாட்களுக்கு மது அருந்தவே கூடாது.அப்படி மது அருந்தினால் தடுப்பூசியால் பயன் இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாதுஎன்றார்.


இரு முறைப்போடப்படும்.


கொரோனா தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று முன்தினமண போடப்பட்டு 14 நாட்களுக்கு பின் அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பு மிக்கவை என மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
14-ஜன-202111:05:03 IST Report Abuse
vbs manian அனுமதி பெறாமலே போட்டுக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-202106:26:46 IST Report Abuse
Mani . V இந்த வதந்திகளை தடுக்க முதலில் அரசியல்வாதிகள் (மந்திரிகள், எம்பி., எம்எல்ஏ கள்) தடுப்பூசியை போட்டுக் கொண்டு முன்மாதிரியாக திகழலாமே - வெளிநாட்டு தலைவர்கள் மாதிரி. இருந்தாலும் உயிர் பயம் இருக்கத்தானே செய்யும் - பல லட்சம் கோடியில் சொத்துக்கள் இருக்கையில்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
14-ஜன-202111:30:38 IST Report Abuse
Srinivasதடுப்பு ஊசி போட்டுகொண்டு சரக்கு அடிக்கக்கூடாது....குட்கா போடணும்னு சொல்றாரு.......
Rate this:
enkeyem - sathy,இந்தியா
14-ஜன-202116:17:59 IST Report Abuse
enkeyemகஞ்சா அடிக்கனுமுனு சொல்லலியா...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
14-ஜன-202104:33:24 IST Report Abuse
Elango முதல் ஊசியை முதல்வர் திரு எடப்பாடியும், இரண்டாம் ஊசியை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களும் போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X