பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் ஓராண்டில் 373 பசுமை வீடுகள்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ஊட்டி : நீலகிரியில், தாயகம் திரும்பியவர்களுக்கு, 7 கோடி ரூபாயில், 373 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது.நீலகிரியில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில், வறுமை கோட்டிற்கு கீழ், வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசு வழங்குகிறது. வீட்டிற்கான

ஊட்டி : நீலகிரியில், தாயகம் திரும்பியவர்களுக்கு, 7 கோடி ரூபாயில், 373 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

நீலகிரியில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில், வறுமை கோட்டிற்கு கீழ், வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசு வழங்குகிறது. வீட்டிற்கான கட்டுமானம், சூரிய விளக்கிற்கான தொகையும் சேர்த்து, 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

நீலகிரியில், 6 தாலுகாவில், கடந்த ஓராண்டில், 151 சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, இம்மாவட்டத்தில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அப்பகுதியில், 222 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலின் கூறுகையில், ''கிராம பகுதிகளில் வீடு இல்லாத, வீட்டு மனை பட்டா உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். கடந்த ஓராண்டில், 373 பசுமை வீடுகள், 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X