கூடலுார் : கூடலுார் அருகே, விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை, 400-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது.
கூடலுார், பாடந்துறை மூச்சு குன்னு பகுதியை சேர்ந்தவர் ராமச் சந்திரன். இவர் அப்பகுதியில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார். இவரின், விவசாய தோட்டத்தில் புகுந்த, காட்டு யானை, பயிரிட்டிருந்த, 400-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர்நிவாரணம் வழங்க வலியுறுத்தி உள்ளனர்.இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் கூறுகையில்,'காட்டு யானைகளால் சேதமடையும் விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை, விரைவாக வழங்க வேண்டும். மேலும், விவசாய தோட்டங்களில் யானைகள் நுழைவதை நிரந்தரமாக தடுக் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE