கூடலுார் : கேரளவில் அன்னாசி பழம் விலையில் சரிவு ஏற்பட்டதன் காரணத்தால், கூடலுாரில் கிலோ, 20ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா மூவாட்டுபுழா, ஆலப்புழா உள்ளிட்ட பல பகுதிகளில், அன்னாசி பழம் உற்பத்தி அதிகரித்து, விலையும் சரிவு ஏற்பட்டுள்ளதுஇதனால், கூடலுார் பகுதிக்கு அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்து, கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில்,'சமீபத்தில் அன்னாசிப்பழம் கிலோ, 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கேரளாவிலிருந்து வெளிநாடு ஏற்றுமதி செய்ய முடியாததால் அதன் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து வரும் அன்னாசி பழம் கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE