பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தாருக்கு கிராக்கி: விலை உயர்வு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடக்கிறது. வெளி மாவட்டங்கள்; உடுமலை, ஆனைமலை, மற்றும் பொள்ளாச்சி சுற்று பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து நான்கு நாட்களாக சிறப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடக்கிறது. வெளி மாவட்டங்கள்; உடுமலை, ஆனைமலை, மற்றும் பொள்ளாச்சி சுற்று பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து நான்கு நாட்களாக சிறப்பு வாழைத்தார் ஏலம் நடத்தப்பட்டது.நேற்று நடந்த ஏலத்தில், பூவன் பழம் தார், 200 - 600 ரூபாய்; செவ்வாழை, 300 - 1,200 ரூபாய்; கற்பூர வள்ளி, 200 - 550; நேந்திரன் ஒரு கிலோ, 17; மற்றும் கதளி கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையானது.

வியாபாரிகள் கூறுகையில், 'ஏலத்துக்கு, 1,500 வாழைத்தார்கள் வரத்து இருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, விற்பனை விறுவிறுப்பாக நடந்ததுடன், விலையும், தாருக்கு, 50 ரூபாய் உயர்ந்து காணப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X