சென்னை:இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்து, சென்னை வந்தது.
இந்தியாவில், 'கோவிஷீல்டு, கோவாக்சின்' ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.இதைத் தொடர்ந்து, நாடு முழுதும், 16ம் தேதி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது. இதற்காக, அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை, மத்திய அரசு பகிர்ந்தளித்து வருகிறது.
முதல் கட்டமாக, தமிழகத்திற்கு, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள், நேற்று முன்தினம் சென்னை வந்தன. அங்கிருந்து, சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.இந்நிலையில், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, கோவாக்சின் தடுப்பூசி மருந்து, 20 ஆயிரம் டோஸ்கள் சென்னை வந்தன.
அவை, சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மாநில சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.அவற்றை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இன்னும் கோவாக்சின் தடுப்பூசி மருந்து வர வேண்டியுள்ளதால், அதன்பின், மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் கூறினர். இதுவரை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என, ஐந்து லட்சத்து, 56 ஆயிரத்து, 500 டோஸ் மருந்துகள், தமிழகத்திற்கு வந்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE