பொள்ளாச்சி : மாட்டுப்பொங்கலையொட்டி, பொள்ளாச்சியில், கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை பாரம்பரியத்தோடு கொண்டாடப்படுகிறது. அதில், உழவனுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கடைகளில், கால்நடைகளுக்கான கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, திருஷ்டிக்கான கருப்பு கயிறு பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
அதுமட்டுமின்றி சலங்கையுடன் கூடிய அணிகலன்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொம்புகளில் கட்டும் அணிகலன்கள் விதவிதமாக உள்ளன.கயிறு வகைகள் ஐந்து ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையும்; அலங்கார பொருட்கள், 20 - 300 ரூபாய்க்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
வியாபாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சியில் மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும். பூப்பொங்கலன்று சவாரி வண்டியில், கோவிலுக்கு செல்வார்கள். அதனால், கால்நடைகள், சவாரி வண்டிகளை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. ரசனைக்கு ஏற்ப, புதிய அணிகலன்கள் விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE