பொள்ளாச்சி : தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தபால் ஊழியர் சங்கங்கள் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன், தபால் ஊழியர்களின் மாநில சங்கங்கள் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, என்.எஸ்.சி., கோட்ட தலைவர் சிவகார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜகோபால் கோரிக்கைகளை விளக்கினார்.ஆர்ப்பாட்டத்தில், கொரோனா காலத்திலும், அன்றாட பணிகளுடன், கூடுதலாக ஆதார் பணிகளையும் மேற்கொள்ள வற்புறுத்துதல், பொருளாதார வீழ்ச்சியிலும் எட்ட முடியாத இலக்குகளை நிர்ணயித்து, புதிய கணக்குகளை துவக்க நிர்பந்தம் செய்தல், பணிச்சுமையை குறைக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்காதது குறித்து, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE