வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி, பெரியகல்லார் ஆகிய இரண்டு இடங்களில் 'மினி கிளினிக்' திறப்பு விழா, கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.
விழாவில் மினிகிளினிக்கை திறந்து வைத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது:வால்பாறை மலைப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. எஸ்டேட் பகுதியில் உள்ள ரோடுகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. விடுபட்ட ரோடுகளும் விரைவில் நகராட்சி சார்பில் சீரமைக்கப்படும். பழங்குடியின மக்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், இரண்டு இடங்களில் 'மினி கிளினிக்' திறக்கப்பட்டுள்ளன.
வால்பாறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.விழாவில், எம்.எல்.ஏ., கஸ்துாரி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE