கர்நாடகா அமைச்சரவையில் ஏழு பேர் சேர்ப்பு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில், நான்கு எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.எல்.சி.,க்கள் என ஏழு பேர், நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். கலால் துறை அமைச்சர் நாகேஷின் பதவி பறிக்கப்பட்டது. ஆர்.ஆர்.நகர் எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு, அமைச்சர் பதவி கிடைக்காததால், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். கர்நாடக அரசில், ஏழு அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தன. இப்பதவியில் அமர, 25க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள்,
 கர்நாடகா அமைச்சரவையில் ஏழு பேர் சேர்ப்பு

பெங்களூரு:கர்நாடகாவில், நான்கு எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.எல்.சி.,க்கள் என ஏழு பேர், நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கலால் துறை அமைச்சர் நாகேஷின் பதவி பறிக்கப்பட்டது. ஆர்.ஆர்.நகர் எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு, அமைச்சர் பதவி கிடைக்காததால், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். கர்நாடக அரசில், ஏழு அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தன. இப்பதவியில் அமர, 25க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் போட்டியிட்டனர்.


ஆலோசனை

யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, மூத்த அமைச்சர்களுடன், முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.இறுதியாக, மூத்த எம்.எல்.ஏ.,க்கள், உமேஷ் கத்தி, அங்காரா, அரவிந்த லிம்பாவளி, முருகேஷ் நிரானி; எம்.எல்.சி.,க்கள் எம்.டி.பி.நாகராஜ், சங்கர், யோகேஸ்வர் ஆகிய ஏழு பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கர்நாடக ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், நடந்த பதவியேற்பு விழாவில், கவர்னர் வஜுபாய் வாலா, ஏழு பேருக்கும் ரகசிய காப்பு பிரமாணமும், பதவி பிரமாணமும் செய்து வைத்தார். தற்போதைய அமைச்சர்களில், முல்பாகல் சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், கலால் துறை அமைச்சருமான நாகேஷ் பதவி பறிக்கப்பட்டது. அவரை ராஜினாமா செய்யும்படி முதல்வர் உத்தரவிட்டார்.

ஆரம்பத்தில், ராஜினாமா செய்ய மறுத்த அவருக்கு, உரிய பதவி தருவதாக முதல்வர் உறுதியளித்தார். அதன் பின்னரே, ராஜினாமா செய்வதாக கூறினார். இவரால், காலியான இடத்திற்கு, யாரும் நியமிக்கப்பட வில்லை.


எதிர்பார்ப்பு

பா.ஜ., அரசு அமைய காரணமாக இருந்த, ஆர்.ஆர்.நகர் எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்றரை மாதம் காத்திருக்கும் படி, பா.ஜ., மேலிடம் கூறிவிட்டது. இருப்பினும், முனிரத்னாவுக்கு அமைச்சர் பதவி வழங்க, முதல்வர் தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், அவர் எண்ணம் நிறைவேறவில்லை. முனிரத்னா, கடும் அதிருப்தியில் உள்ளார்.

பதவியேற்பு விழாவில், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண் சிங், மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், அமைச்சர்கள், பதவியேற்றவர்களின் குடும்பத்தினர், அவர்களின் ஆதரவாளர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X