பொது செய்தி

தமிழ்நாடு

ஆல்கொண்டமால் விழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை - செஞ்சேரிமலைரோடு, சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பூப்பொங்கல் என்றழைக்கப்படும், பொங்கல் விழாவில் இறுதி நாளான, வரும் 16ம் தேதி, இக்கோவிலில், கால்நடைகளுக்கென சிறப்பு வழிபாடு செய்யப்படும் விழா நடக்கிறது. உடுமலை சுற்றுப்பகுதி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும், இக்கோவில் விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில்

உடுமலை : உடுமலை - செஞ்சேரிமலைரோடு, சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பூப்பொங்கல் என்றழைக்கப்படும், பொங்கல் விழாவில் இறுதி நாளான, வரும் 16ம் தேதி, இக்கோவிலில், கால்நடைகளுக்கென சிறப்பு வழிபாடு செய்யப்படும் விழா நடக்கிறது. உடுமலை சுற்றுப்பகுதி மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும், இக்கோவில் விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் உடுமலையிலிருந்து, குறைவான பஸ்களே இக்கோவில் வழிதடத்தில் இயக்கப்படுகிறது. விழாவையொட்டி, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, உடுமலை கிளை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை (15ம் தேதி) மாலை முதல் 17ம் தேதி வரை உடுமலையிலிருந்து, பயணிகள் கூட்டத்தின் அடிப்படையில் சிறப்பு பஸ்களும் மற்றும் பெதப்பம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், இக்கோவில் வழியாக இயக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X