சென்னை:பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத் ஆகியோர், இன்று சென்னையில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்கின்றனர்.
சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதி, பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள, ஸ்ரீநவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சமுதாய பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது. இன்று பொங்கல் விழா, காலை, 6:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை நடக்க உள்ளது.
பொங்கல் வழிபாடு, கோமாதா பூஜை, விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார்.தமிழக பா.ஜ., சார்பில், அனைத்து மாவட்டங்களிலும், 'நம்ம ஊரு பொங்கல்' என்ற தலைப்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இன்று சென்னை, மதுரவாயல் பகுதியில், மாலை, 5:00 மணிக்கு நடக்கும் பொங்கல் விழாவில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE