பணியை வேகப்படுத்துங்க...
திருப்பூர் மாநகராட்சி, 60வது வார்டு, எஸ்.ஆர்., நகரில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழி, மூடப்படவில்லை. பணி மந்தமாக நடப்பதால், குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியும் மூடப்படவில்லை. போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பணிகளை துரிதமாக முடித்து, குழிகளை மூடவேண்டும்.-ஆனந்தன், எஸ்.ஆர்., நகர்.
குண்டு குழியுமாக மாறிய ரோடு
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே, நொய்யலாற்று பாலத்தில் ரோடு, குண்டும் குழியுமாக, சேதமடைந்து காணப்படுகிறது; மழை காலத்தில், தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது; ரோட்டை சீரமைக்க வேண்டும்.-ராஜலிங்கம், அமராவதிபாளையம்.
குப்பை தொட்டியை காணோம்
திருப்பூர், என்.பி., நகரில், மயிலம்மன் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த இரண்டு குப்பை தொட்டிகளையும் எடுத்து சென்று விட்டனர். மக்கள், ரோட்டோரத்தில் குப்பை கொட்டு கின்றனர். அருகாமை குடியிருப்பு வாசிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதே இடத்தில் மீண்டும் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.-முத்தையா, என்.பி., நகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE