பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி...

Added : ஜன 13, 2021
Share
Advertisement
தோட்டம் அமைக்க விதை 'கிட்'வெள்ளகோவில்: வீட்டில் காய்கறி தோட்டம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், வெள்ளகோவில் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில், ஆறு விதமான காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் வேப்ப எண்ணெய் வழங்கப்படும். பயன் பெற விரும்புவோர், ஆதார் கார்டு நகல், போட்டோவுடன் தோட்டக்கலைத்துறை

தோட்டம் அமைக்க விதை 'கிட்'

வெள்ளகோவில்: வீட்டில் காய்கறி தோட்டம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், வெள்ளகோவில் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில், ஆறு விதமான காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் வேப்ப எண்ணெய் வழங்கப்படும். பயன் பெற விரும்புவோர், ஆதார் கார்டு நகல், போட்டோவுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என உதவி இயக்குனர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

அவிநாசி: சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஜெ.ஜெ., நகரில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள சில குடியிருப்புகளின் இடையே மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வழியில்லாததால், குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, அங்கு மழைநீர் தேங்கி நிற்பதை தவிர்ப்பதற்குரிய கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

பஸ் ஸ்டாப் 'ெஷட்' தேவை

அவிநாசி: திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து வளர்ச்சி பெற்றும் இந்த பேரூராட்சி, அவிநாசி - திருப்பூர் ரோட்டில் உள்ளது. பல்வேறு பணிகளுக்கு அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவோர், ரோட்டோரம் நின்று தான் பஸ் ஏறி, இறங்கி செல்கின்றனர். ரோட்டின் இருபுறமும், பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் பஸ்கள் நின்று செல்லும் போது, வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாப் 'ெஷட்' அமைக்க வேண்டும்.

பா.ஜ., இளைஞரணி மாநாடு

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி சார்பில், கோட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் பூண்டியில் நடந்தது. மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பிப்., 6ல் நடக்கும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் அதிகளவில் பங்கேற்பது; மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வார்டு தோறும் இளைஞர் அணி சார்பில் முகாம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொங்கல் சிறப்பு கவியரங்கம்

திருப்பூர்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், ஏர்முனை எனும் தலைப்பில் பொங்கல் விழா கவியரங்கம், நடந்தது. கவிஞர் குமார் தலைமை வகித்தார். ரவி சுப்ரமணியத்தின் 'நினைவில் ஆழியில் அலையும் கயல்கள்' என்ற நுால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுந்தர சோழனின் 'இந்துத்துவா கோட்பாடும் அரசியலும்,' என்ற, கட்டுரை, சுப்ரபாரதிமணியனின் 'பிளிறல்' சிறுகதை தொகுப்பு நுால் வெளியிடப்பட்டது. குறும்பட இயக்குனர் செந்துார் ரத்தினத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரோட்டரி ஐம்பெரும் விழா

அவிநாசி: திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில், நிறுவனர் தின விழா, குடும்ப விழா, கிறிஸ்துமஸ், பு த்தாண்டு மற்றும் பொங்கல் விழா என, ஐம்பெரும் விழா நடந்தது. விழாவில், பாபு குழுவினரின், மேஜிக் ேஷா இடம்பெற்றது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

ஐ.எம்.ஏ., நிர்வாகிகள் பதவியேற்பு

திருப்பூர்: திருப்பூர் கிளை, இந்திய மருத்துவ சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமை வகித்தனர். மருத்துவ கல்லுாரி 'டீன்' வள்ளி, முன்னாள் தலைவர்கள் கனகசபாபதி, முருகநாதன், ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கிளையின் புதிய தலைவராக குணசேகரன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக சரவணகுமார், துணை தலைவராக பாண்டியராஜன், இணை செயலாளராக ஆனந்த் பொறுப்பேற்றனர்.

அரசு கல்லுாரி பெயர் மாற்றம்

பல்லடம்: - மங்கலம் ரோட்டில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. 2017- -18ம் கல்வி ஆண்டு திறக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. '2017- -18ம் ஆண்டு துவக்கப்பட்ட, ஏழு அரசு கல்லூரிகளில், ஆறு கல்லூரிகளுக்கு, 'எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, பல்லடம் அரசு கல்லூரிக்கு, 'புரட்சி தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி' என பெயர் மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X