திருப்பூர் : சிறப்பு பஸ் இயங்கினாலும், இன்று பொங்கல் பண்டிகை என்பதால் நேற்று தான் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ் ஏற வரும் பயணிகள் காத்திருக்க மூங்கில் தடுப்பு திருப்பூர் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கூட்டம் குறைவாக இருந்ததால், இதில் யாரும் வரிசையில் காத்திருக்கவில்லை.மதுரை, தேனி, திண்டுக்கல் செல்ல கூடுதல் பஸ் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டதால், வந்த பயணிகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.போதிய இடவசதி இல்லாததால், கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட், காமராஜர் ரோடு ரவுண்டானா முன், யுனிவர்சல் தியேட்டர் சந்திப்பு ஆகிய தற்காலிக பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது.
பஸ்களில் ஏற ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் குழந்தைகளுடன் வந்த பெண்கள் சிரமப்பட்டனர்.ரயிலிலும் கூட்டம்ஏற்கனவே முன்பதிவு நிறைவு பெற்றிருந்ததால், திருப்பூர் வழியாக பயணித்த சென்னை நோக்கி பயணித்த சேரன், நீலகிரி கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். முன்பதிவு இல்லாத பயணிகள் பயணிக்க முடியாது என்ற விபரம் அறியாமல் ரயில்வே ஸ்டேஷன் வந்த பலர், ரயில் ஏற வாய்ப்பு இல்லாமல் திரும்பி சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE