சென்னை:ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு, தலா, 2,500 ரூபாய் என, நேற்று வரை, 5,125 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு, துணிப்பை ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. அதற்காக, 5,605 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில், ரொக்க பணத்திற்காக மட்டும், 5,158 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பரிசு தொகுப்புகள், 4ம் தேதி முதல், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.அவற்றை வாங்க, நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின், இம்மாதம், 25ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.நேற்று வரை, 2.05 கோடி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் என, மொத்தம், 5,125 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
, பெரும்பாலான கடைகளில், ரொக்க பணத்துடன், அரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்பட்டன. முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை வழங்கப்படவில்லை. இதனால், பொங்கல் பொருட்கள் முழுமையாக கிடைக்காமல், கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE