பொது செய்தி

தமிழ்நாடு

'பறக்கிறது' பஞ்சு விலை; நுாற்பாலைகள் கவலை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
திருப்பூர் : பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது; கேண்டி, 45 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால், நுாற்பாலை துறையினர் கவலை அடைந்துள்ளனர். நுால் விலை உயர்வால், ஆடை உற்பத்தி துறையினருக்கும் சிக்கல் ஏற்படுகிறது.கடந்த அக்டோபரில், 2020 - 21 பருத்தி ஆண்டு துவங்கியது. சீசன் துவக்கத்தில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது. படிப்படியாக பஞ்சு விலை உயரத்

திருப்பூர் : பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது; கேண்டி, 45 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால், நுாற்பாலை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

நுால் விலை உயர்வால், ஆடை உற்பத்தி துறையினருக்கும் சிக்கல் ஏற்படுகிறது.கடந்த அக்டோபரில், 2020 - 21 பருத்தி ஆண்டு துவங்கியது. சீசன் துவக்கத்தில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது. படிப்படியாக பஞ்சு விலை உயரத் துவங்கியது.மூலப் பொருள் விலை உயர்வால், உற்பத்தி செலவு அதிகரித்ததையடுத்து, தமிழக நுாற்பாலைகளும் நுால் விலையை உயர்த்தி வருகின்றன.கடந்த மூன்று மாதங்களில், கிலோவுக்கு 30 ரூபாய் வரை நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, பஞ்சு விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 45 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.விலை மேலும் உயரும் நிலை உருவாகியுள்ளதால், தமிழக நுாற்பாலை துறையினரும், ஆயத்த ஆடை உற்பத்தி துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.நுால் மில் உரிமையாளர் சரவணன் கூறியதாவது:சி.சி.ஐ.,யுடன் போட்டியிட்டு, பஞ்சு விலை உயர்த்துவதை வர்த்தகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, பொங்கலுக்கு பின், பஞ்சு விலை மேலும் உயரும் நிலை உருவாகியுள்ளது. வரும் ஏப்ரலில் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சுவிலை, தற்போதே 45 ஆயிரத்தை கடந்துவிட்டது.நுால் ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் உள்நாட்டிலும் நுால் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், சீசன் நிறைவடையும்போது, பஞ்சு விலை மேலும் அபரிமிதமாக உயர்ந்து, கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுமோ என்கிற கவலை சூழ்ந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ''ஏற்றுமதியில் கூடு தல் கவனம் செலுத்தும் நுாற்பாலைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு போதிய அளவு நுால் வழங்க தயங்குகின்றன; நுால் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.இதனால், ஆடை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பஞ்சு, நுால் விலையை கட்டுக்குள் கொண்டுவர, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X