திருப்பூர் : திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இயந்திரங்கள், பனியன் ரோல்கள் எரிந்து நாசமாகின.
திருப்பூர், பொங்குபாளையம் அடுத்த அய்யம்பாளையத்தில் பனியன் நிட்டிங் நிறுவனம் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நிறுவனம் பூட்டியிருந்தது.நேற்று பகல் 1:00 மணியளவில் பூட்டியிருந்த நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. வடக்கு தீயணைப்பு துறையினர் இரு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் தீ விபத்தில், அங்கிருந்த 27 நிட்டிங் இயந்திரங்கள், 3.5 டன் எடையுள்ள பனியன் ரோல் மற்றும் 3 டன் நுால் பண்டல்கள் எரிந்து நாசமாகின. பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE