பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், பெட்ரோல், டீசல் விலை, அடுத்த சில தினங்களில், புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு, 22 காசுகள் உயர்ந்து, 87.18 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டருக்கு, 23 காசுகள்

சென்னை:தமிழகத்தில், பெட்ரோல், டீசல் விலை, அடுத்த சில தினங்களில், புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு, 22 காசுகள் உயர்ந்து, 87.18 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் லிட்டருக்கு, 23 காசுகள் அதிகரித்து, 79.95 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதனால், அடுத்த சில தினங்களில், பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 2018 அக்., 4ல், லிட்டர் பெட்ரோல், 87.33 ரூபாய்க்கும்; அம்மாதம், 16ல், லிட்டர் டீசல், 80.04 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுவே, இதுவரை பெட்ரோல், டீசல் விற்பனையில், உச்ச விலையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X