பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மானியம் தோட்டக்கலைதுறை அழைப்பு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறையினர் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, குழி தோண்டுவதற்கான மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்.பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறையினர் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க, குழி தோண்டுவதற்கான மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்.

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான பிரதான குழாய்கள் துணை பிரதான குழாய்கள் பதிக்க ஒன்றரை அடி முதல், 2 அடி வரை அகலம் மற்றும் ஆழத்தில் குழி எடுக்க வேண்டும் இதற்கு விவசாயிகளுக்கு உதவ சொட்டுநீர் பாசனம் அமைக்க, ஒரு ஏக்கருக்கு, 1,200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இதில் பயன்பெற சொட்டு நீர் பாசனத்திற்கு விண்ணப்பிக்கும் போதே, குழி தோண்டுவதற்கான மானியத்துக்கும் சேர்ந்து விண்ணப்பிக்கலாம். பணி நிறைவடைந்தவுடன் எடுத்த புகைப்படங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை விவசாயிகள் அணுகலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வித்யா தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X