மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாலுகாவில், 25க்கும் மேற்பட்ட, ஆதிவாசி மக்கள் வசிக்கும் மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என விண்ணப்பித்தனர். கடந்த மூன்று மாதங்களாக ஆதிவாசி மக்களுக்கு இருளர் ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, மருதுார், சிக்கதாசம்பாளையம், தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள, 42 மாணவ, மாணவிகளுக்கு இருளர் ஜாதி சான்று வழங்கும் நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சாந்தாமணி தலைமை வகித்தார். தலைமையிட துணை தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் ஜாதி சான்றுகளை வழங்கி பேசியதாவது:ஆதிவாசி மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, நேரடியாக மலைவாழ் கிராமங்களுக்கு சென்று, ஆய்வு செய்து பின், இருளர் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த மூன்று மாதங்களில், 440 பேருக்கு ஜாதி சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வித்தொகை, மேற்படிப்புக்கு செல்லவும், உதவிகள் பெறவும் முடியும். ஜாதி சான்று கேட்டு, இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்து, ஜாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பேசினார்.காரமடை வருவாய் ஆய்வாளர் தெய்வ பாண்டியம்மாள் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE