பொது செய்தி

தமிழ்நாடு

'நல்ல கல்வியும் தேசப்பற்றும் நமது நாட்டை உயர்த்தும்'

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : ''நல்ல கல்வியும், தேசப்பற்றும், ஒரு நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்,'' என, ராமகிருஷ்ண வித்யாலயத்தை சேர்ந்த, சுவாமி ஹரிவரதானந்தா பேசினார்.மேட்டுப்பாளையத்தில், கோவை வடக்கு மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்

மேட்டுப்பாளையம் : ''நல்ல கல்வியும், தேசப்பற்றும், ஒரு நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்,'' என, ராமகிருஷ்ண வித்யாலயத்தை சேர்ந்த, சுவாமி ஹரிவரதானந்தா பேசினார்.

மேட்டுப்பாளையத்தில், கோவை வடக்கு மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தை சேர்ந்த, சுவாமி ஹரிவரதானந்தா, பேசுகையில், ''இந்திய தாய்நாட்டை நேசிப்பது, உண்மையில் விவேகானந்தருக்கு செய்யும் சேவையாகும்.

உயர்ந்த கல்வியும், தேசப்பற்றும், ஒரு நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். விவேகானந்தர் காட்டிய வழியில், நம் குழந்தைகளுக்கு கல்வி, தேசப்பற்று ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். தங்கவேல் நன்றி கூறினார்.

காரமடையில், சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா, அனுமன் ஜெயந்தி விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் பன்னாட்டு கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X