பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அள்ளாதவர்கள் 'லிஸ்ட்' 'கிடுக்கிப்பிடி' போட்டது ஐகோர்ட்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கோவை : பட்டப்படிப்பு படித்து, கோவை மாநகராட்சியில், துாய்மை பணியாளராக சேர்ந்தவர்களில், குப்பை அள்ளும் பணிக்கு செல்லாதவர்கள் யார், யார் என்கிற பெயர் பட்டியலை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த, துாய்மை பணியாளர் பணியிடத்துக்கு, 325 பேரை, மாநகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு புதிதாக நியமித்தது.நேரடி நியமனம்;

கோவை : பட்டப்படிப்பு படித்து, கோவை மாநகராட்சியில், துாய்மை பணியாளராக சேர்ந்தவர்களில், குப்பை அள்ளும் பணிக்கு செல்லாதவர்கள் யார், யார் என்கிற பெயர் பட்டியலை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த, துாய்மை பணியாளர் பணியிடத்துக்கு, 325 பேரை, மாநகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு புதிதாக நியமித்தது.நேரடி நியமனம்; கல்வித்தகுதி அவசியமில்லை; அனைத்து ஜாதியினரும் பங்கேற்கலாம் என அறிவித்ததால், பட்டம் படித்தவர்களும் விண்ணப்பித்து, வேலை பெற்றனர்.இதில், அரசியல் செல்வாக்குள்ள பலரும், குப்பை அள்ளும் பணிக்குச் செல்வதில்லை. மாற்றுப்பணி பெற்று, அலுவலக வேலைகளை செய்கின்றனர்.இதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக துாய்மை பணியாளர்களாக பணிபுரிவோருக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் கூட, மாற்றுப்பணி கிடைப்பதில்லை.

இச்சூழலில், நேரடி நியமன பாணியில், மீண்டும் துாய்மை பணியாளர் எடுக்க, மாநகராட்சி திட்டமிட்டு, விண்ணப்பம் பெற்றுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கூறியும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறியும், ஏற்கனவே வேலைக்கு எடுத்தவர்களில் பட்டம் படித்தவர்கள், குப்பை அள்ள வருவதில்லை என்பதை சுட்டிக் காட்டியும், தொழிலாளர்கள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, புதிதாக வேலைக்கு எடுத்தவர்களில், துாய்மை பணி செய்யாமல், மாற்றுப்பணியில் உள்ளவர்கள் பெயர் பட்டியலை எழுத்துப்பூர்வமாக, வரும், 25ம் தேதி, மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X