வான்மழை தந்த பரிசு நீர்ப்பாசனம் நெடுவயல் நிறைந்தது பாசன நீரால் நிலம் உழுது சமன் செய்துநடுவில் உள்ள களைகளை அகற்றி நெல்மணிகளை விதைத்தான் விவசாய குடிமகன் கதிர் விளைந்தது நெடு நெடுவென்று கதிர் அறுத்து போர் அடித்து தானியத்தை தந்தான் பசியாற மக்களுக்கு தானியம் படைத்தவனுக்கு மாபெரும் விழா பயிர் விளைய ஒளி தந்தபகலவனை துதிக்க ஒரு விழா பால் சுரந்து பசியாற்றிய பசுவினங்களுக்கும் பாடுபட்ட காளைகளுக்கும் தனி விழா பழமை நீங்கி புதுமை பொங்கபோகி பண்டிகை என்றொரு விழா தீய எண்ணங்களை மனதிலிருந்து எரித்து தூய எண்ணங்களை மனதில் விதைக்கும் பானையில் பொங்கல் பொங்குவது போல பொங்கி வழியட்டும் மனதில் மகிழ்ச்சி நுனிக் கரும்பு இனிப்பது போல நெஞ்சத்தில் இனிய நினைவுகள் பொங்கட்டும் தமிழர் திருவிழா தனியொரு விழா தித்திக்க தித்திக்க பொங்கலோ பொங்கல்!
-- ராம்கி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE