கோவை : தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு தேதி அறிவிப்பை, காலம் தாழ்த்தாமல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்புக்காக பள்ளி மற்றும் கல்லுாரி படிப்புக்கு இடையே தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியை, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக, கடந்த ஆக., மாதம் வணிகவியல் கல்வி தேர்வு நடக்கவில்லை.தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட வணிகவியல் தேர்வை, பிப்., மாதம் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த அக்., 27ம் தேதியே வெளியானது.ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், தேர்வு தேதி அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
விரைவாக தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டால், தேர்ச்சி பெறும் மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியும்.இதனால், மாணவர்களின் நலன் கருதி, காலம் தாழ்த்தாமல் வணிகவியல் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உடனடியாக வெளியிட வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE