சென்னை:திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசு விருதுகள் பெறுவோரின் பெயர்களை, நேற்று முதல்வர்பழனிசாமி., அறிவித்தார்.
அதன் விபரம்:விருது பெயர் விருதாளர் பெயர்
திருவள்ளுவர் விருது முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்
பெரியார் விருது தமிழ்மகன் உசேன்
அம்பேத்கர் விருது வரகூர் அ.அருணாசலம்
அண்ணா விருது மறைந்த கடம்பூர் ஜனார்த்தனன்
காமராசர் விருது தேவராஜ்
பாரதியார் விருது பூவை செங்குட்டுவன்
பாரதிதாசன் விருது அறிவுமதி
திரு.வி.க., விருது வி.என்.சாமி
கி.ஆ.பெ.விசுவநாதம்
விருது சேதுராமலிங்கம்
தமிழ்த்தாய் விருது- வி.ஜி.பி., உலகத்தமிழ் சங்கம்
கபிலர் விருது ஏழுமலை
உ.வே.சா., விருது ராஜநாராயணன்
கம்பர் விருது எச்.வி.ஹண்டே
சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தன்
உமறுப் புலவர் விருது சையத் அசன்
ஜி.யு.போப் விருது உல்ரீகே நிலோகலக, ஜெர்மனி
இளங்கோவடிகள் விருது வைத்தியலிங்கன்
அம்மா இலக்கிய விருது- மகாலட்சுமி
சிங்காரவேலர் விருது- அழகேசன்
மறைமலை அடிகளார்விருது- தாயுமானவன்
அயோத்திதாசப் பண்டிதர்விருது செல்லம்மாள்
வள்ளலார் விருது ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார்விருது ஞானப்பூங்கோதை
சி.பா.ஆதித்தனார் நாளிதழ்விருது தினமணி
சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி
சி.பா.ஆதித்தனார்திங்களிதழ் விருது செந்தமிழ்
தேவநேயப் பாவாணர்விருது சிவமணி
வீரமாமுனிவர் விருது கிரிகோரிஜேம்க, ஹாங்காங்
*மொழி பெயர்ப்பாளர் விருது, 10 பேருக்கும், 2019ம் ஆண்டிற்கான, முதல்வர் கணினித் தமிழ் விருது ராஜாராமனுக்கும் வழங்கப்பட உள்ளன
* கடந்த, 2020ம் ஆண்டிற்கான இலக்கிய விருது - பிரான்சை சேர்ந்த அலெக்சிசு தேவராசு சேன்மார்க்; இலக்கண விருது - இலங்கையைச் சேர்ந்த அருணாசலம் சண்முகதாஸ்; மொழியியல் விருது - சிங்கப்பூரைச் சேர்ந்த திண்ணப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன. அதேபோல், 2020ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE