தை திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு, பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
வழக்கமான பள்ளி நாட்களில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கலை, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிப்பது வழக்கம்.மாணவர்களுடன் ஆசிரியர்கள் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடுவர். பள்ளிகள் திறக்கப்படாத தற்போதைய சூழலில், ஆசிரியர்கள் மட்டுமே இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர். மண்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை, சூரிய பகவானுக்கு காணிக்கையாக்கி, 'பொங்கலோ பொங்கல்' என கூவியபடி, வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
* வெள்ளலுார், எல்ஜி மெட்ரிக் பள்ளியில், மாணவர்கள், ஆன்லைன் மூலம், கிராமிய நடனம், பாட்டு பாடி, பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.ஆசிரியர்கள் உரிய சமூக இடைவெளி பின்பற்றி, கும்மியடித்து பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில், பள்ளி தாளாளர் மணி, முதல்வர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* புலியகுளம், ஏ.எல்.ஜி., மெட்ரிக் பள்ளியில், ஆசிரியர்கள் இணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு, பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE